வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

புதிய கல்வி கொள்கையை வடகிழக்கு பகுதியில் செயல்படுத்துவது குறித்து ஐஐஎம் ஷில்லாங் பிரதிநிதிகளுடன் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடல்

Posted On: 28 JAN 2021 7:19PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய அமைச்சகத்தின் ஆதரவை பெற்றுள்ள ஐஐஎம், ஷில்லாங்கில் இருக்கும் பி ஜே அப்துல் கலாம் கல்வி மையம், தேசிய கல்வி கொள்கையை குறிப்பாக வடகிழக்கில் செயல்படுத்துவதற்கு உதவுவதோடு, அதை சிறப்பான முறையில் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளும்.

ஐஐஎம் ஷில்லாங்கின் நிர்வாகத்தோடு இன்று நடந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இதை தெரிவித்தார்.

ஐஐஎம் ஷில்லாங்கின் தலைவர் ஷிஷிர் பஜோரியா, ஆட்சிமன்றக்குழுவின் உறுப்பினர் அதுல் சந்திரகாந்த் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை சுதந்திர இந்தியாவில் இது வரை செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மற்றும் முக்கியமான சீர்திருத்தம் என்று அமைச்சர் கூறினார்.

*****(Release ID: 1693055) Visitor Counter : 117