தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல நடிகர் பிஸ்வஜித் சட்டர்ஜிக்கு விருது

கோவா சர்வதேச திரைப்பட விழாவில், பிரபல நடிகர் திரு பிஸ்வஜித் சட்டர்ஜிக்கு, இன்று இந்த ஆண்டின் இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.

இவர் இந்திய மற்றும் வங்காள மொழி படங்களில் நடித்துள்ளார், பாடல்களும் பாடியுள்ளார். திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். திரைப்பட விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில், கோவா ஆளுநர் திரு பகத் சிங் கோசியாரி, முதல்வர்  டாக்டர் பிரமோத் சவந்த், மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ ஆகியோர் இணைந்து இந்த விருதை வழங்கினர்.

இந்த விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் கடந்த 16ம் தேதி அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் திரு பிஸ்வஜித் சட்டர்ஜி, ‘‘இந்த விருதை வழங்கி கவுரவித்ததற்காக, இந்திய அரசுக்கும் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் எனது இதயப்பூர்வ நன்றி. வங்கதேசமும், இந்தியாவும் சகோதரர்கள், தனித்தனியானவை அல்ல’’ என்றார்.

பல புகழ்பெற்ற வங்க மொழிப்படங்களில் நடித்திருந்தாலும்,

கஹ்தே ஹை முஜ்கோ ராஜாஎன்ற படத்தை திரு பிஸ்வஜித் தயாரித்தும் இயக்கியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691887

*********************


(रिलीज़ आईडी: 1691917) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Malayalam