அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதுமைகள் மற்றும் அறிவு உருவாக்கத்திற்கான தொட்டில்களாக அறிவியல் நிறுவனங்கள் திகழ்கின்றன: பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர்புதுமைகள் மற்றும் அறிவு உருவாக்கத்திற்கான தொட்டில்களாக அறிவியல் நிறுவனங்கள் திகழ்கின்றன: பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர்

Posted On: 23 JAN 2021 11:20AM by PIB Chennai

பல்துறை சிக்கல்கள் மீது கவனம் செலுத்துதல், தீர்வு சார்ந்த மாற்றங்களுக்கான ஆராய்ச்சி, தொழிற்சாலைகள், புது நிறுவனங்கள் மற்றும் புதிய சிந்தனைகளின் பங்களிப்பை அதிகப்படுத்துதல், தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேறுதல் ஆகியவை குறித்து 2021 ஜனவரி 22 அன்று நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

காணொலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர், புதுமைகள் மற்றும் அறிவு உருவாக்கத்திற்கான தொட்டில்களாக அறிவியல் நிறுவனங்கள் திகழ்கின்றன என்றார்.

 

அறிவியல் உள்கட்டமைப்பின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று கூறிய அவர், எளிமையாக அணுகக்கூடிய வகையில் இவற்றை உருவாக்குவதோடு, சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

கல்வித்துறை-தொழில்துறை கூட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் வசதிகளை பயன்படுத்துவதில் புது நிறுவனங்களை ஈடுபடுத்துதல், கோட்பாட்டு அறிவியலின் பயன்பாட்டை ஊக்குவித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவரும் ஐஐடி கான்பூர் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் எஸ் ஜி தண்டே தலைமை வகித்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் புதிய இலச்சினை இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. 2000 முதல் 2019-ஆம் ஆண்டு வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் 2913 திட்டங்களுக்கு ரூ 2953 கோடி ஒதுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691482

**********************


(Release ID: 1691595) Visitor Counter : 214


Read this release in: English , Hindi , Punjabi