தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்: இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ திரைப்படம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த ஆண்டை நாடு கொண்டாடும் இந்தத் தருணத்தில் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் திரு ஷ்யாம் பெனகலின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ' திரைப்படம் கோவாவின் பனாஜியில் இன்று (ஜனவரி 23 2021) சிறப்பாக திரையிடப்படுகிறது.

நேதாஜியின் உறுதியான மனநிலையையும், தன்னிகரற்ற சேவையையும் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம தினமாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

 

நேதாஜி பற்றிய சிறப்புத் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த திருவிழாவின் இயக்குநர் திரு சைத்தன்ய பிரசாத், “இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகவும் போற்றுதலுக்குரிய தேசிய தலைவர்களுள் ஒருவராகவும் உயரிய சக்தியாகவும் நேதாஜி தொடர்ந்து நினைவு கூரப்படுகிறார்”, என்று கூறினார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகரும் இயக்குநருமான திரு சச்சின் கெடேகர் நேதாஜியாக நடித்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடுக்கான சிறந்த திரைப்படங்கள் பிரிவில் தேசிய விருதையும் இந்தத் திரைப்படம் வென்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691519

**********************


(Release ID: 1691576) Visitor Counter : 261