தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

20-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூகத்தில் தங்களது குரல்களை அடையாளம் காண விரும்பும் பெண்களை பற்றிய திரைப்படம் மாரல் ஆர்டர்: நடிகர்கள் ஜோவாவ் பெட்ரோ மாமெடி மற்றும் வெரா மௌரா

Posted On: 22 JAN 2021 5:05PM by PIB Chennai

வாழ்வியல் போராட்டங்களை எதிர்கொள்ளும், 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐரோப்பிய சமூகத்தில் தங்களது குரல்களை அடையாளம் காண விரும்பும் பெண்களை பற்றிய மரியோ பரோசோவின் போர்ச்சுகீசிய திரைப்படமான மாரல் ஆர்டரின் சர்வதேச சிறப்புக் காட்சி கோவாவில் நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் உலக பனோரமா பிரிவில் நேற்று திரையிடப்பட்டது.

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய நடிகர் வெரா மௌரா, “போர்ச்சுகலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான இந்த திரைப்படம், 20-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூகத்தில் தங்களது குரல்களை அடையாளம் காண விரும்பும் பெண்களை பற்றியதாகும்,”என்றார்.

 

கதாநாயகி மரியவின் பணியாளர் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். துணிச்சலான முடிவை எடுக்கும் பணக்கார வீட்டை சேர்ந்த பெண்ணைப் பற்றிய கதை இது என்று அவர் மேலும் கூறினார்.

புது வாழ்க்கையை தேடி மரியா ஒரு ஒட்டுநருடன் வெளியேறுகிறார். ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோவாவ் பெட்ரோ மாமெடியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.

பெருந்தொற்று காலத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இங்கு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691244

**********************



(Release ID: 1691401) Visitor Counter : 163