பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ‘ஹ்ரம் சக்தி’ இணையதளத்தை தொடங்கினார் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா

Posted On: 22 JAN 2021 4:50PM by PIB Chennai

புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக, ‘ஷ்ரம்சக்திஎன்ற இணையளத்தை கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்களை திறம்பட வகுக்க முடியும். கோவாவில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக பிரிவையும், பழங்குடியினர் கண்காட்சி அரங்கத்தையும், ‘ஷ்ரம்சக்திஎன்ற பயிற்சி கையேட்டையும் அவர் வெளியிட்டார். கோவாவில் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக பிரிவை கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார். இப்பிரிவு கோவாவில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா கூறியதாவது:

 புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய நிகழ்நேர தகவல்கள் இல்லாததால், அவர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்குவதில் மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொது ஊரடங்கு காலத்தில், புலம் பெயர் தொழிலாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டனர். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவர்கள் பணியாற்றுகின்றனர். பணியாற்றும் இடங்களில் பல இன்னல்களையும் சந்திக்கின்றனர். பழங்குடியின புலம் பெயர் தொழிலாளர்கள், தங்களுக்கு உரிய உரிமைகள் பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர்.

இவ்வாறு திரு அர்ஜூன் முண்டா தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691237

**********************(Release ID: 1691370) Visitor Counter : 81


Read this release in: English , Hindi , Manipuri , Punjabi