மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கேந்திரிய வித்யாலயா புதிய கட்டிடங்களை மத்திய கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்

Posted On: 21 JAN 2021 5:48PM by PIB Chennai

பீகாரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பெட்டியா மற்றும் சத்திஸ்கரில் உள்ள கேந்திரிய வித்யாலயா எண். 4 கோர்பாவின் புதிய கட்டிடங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறப்பான கல்விக்கான அடையாளங்களாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திகழ்வதாக குறிப்பிட்டார். கடந்த ஆறு வருடங்களில் நாடு முழுவதும் 150-க்கும் அதிகமான கேந்திரிய வித்யாலயாக்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஒட்டுமொத்த கட்டிட செயல்பாடுகளிலும் பசுமை கட்டிட விதிகளை செயல்படுத்தியுள்ள கேந்திரிய வித்யாலயா அமைப்பை அவர் பாராட்டினார். கேந்திரிய வித்யாலயாக்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு மாணவர், ஒரு மரம்’, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களையும் அவர் பாராட்டினார்.

புதிய கல்வி கொள்கையின் பல்வேறு கூறுகள் குறித்தும் அமைச்சர் பேசினார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கல்வி முறைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விரைந்து மாறியதாகவும், கல்விப்பணிகள் நாடு முழுவதும் தொய்வின்றி நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளர் திருமதி அனிதா அகர்வால், கேந்திரிய வித்யாலயா நிறுவனத்தின் ஆணையர் திருமதி நிதி பாண்டே ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1690918

**********************


(Release ID: 1691008) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Hindi , Manipuri