தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மதத்திற்குள்ளேயே உள்ள ஆதிக்கத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராடுவதை ஹோலி ரைட்ஸ் திரைப்படம் எடுத்துரைக்கிறது: இயக்குநர் திருமிகு ஃபர்ஹா கடூன்

Posted On: 21 JAN 2021 3:55PM by PIB Chennai

முத்தலாக் இயக்கத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய பெண்கள் தங்கள் சமூகத்திற்குள்ளேயும், வெளி சக்திகள் அரசியல் நோக்கத்திற்காகத் தங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் குரல் கொடுப்பதை ஹோலி ரைட்ஸ் திரைப்படம் எடுத்துரைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை இந்தத் திரைப்படம் குறிப்பிட்டாலும், பரவலாக பெண்கள் சக்திக்கு எதிரான பிரச்சினைகளைப் பற்றிய திரைப்படமாகவே நான் இதைக் கருதுகிறேன். நாம் விரும்பினால் எதையும் சாதிக்க முடியும் என்ற கருத்தையும் இந்தத் திரைப்படம் முன்வைக்கிறது.” 51 இந்திய பனோரமா படப் பிரிவில் திரையிடப்பட்ட ஹோலி ரைட்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் திருமிகு ஃபர்ஹா கடூன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெறும் 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 6-ஆம் நாளான இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.

மதம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தத் திரைப்படம் வெளிக்கொணர்வதாக திருமிகு ஃபர்ஹா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690870

************



(Release ID: 1690964) Visitor Counter : 181