தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அனைத்து வகையான இசையும் திரைப்படங்களில் இருக்க வேண்டும்: இசை வல்லுநர்கள் ஹரிஹரன் மற்றும் பிக்ரம் கோஷ்

Posted On: 21 JAN 2021 3:22PM by PIB Chennai

இந்தியாவில், நமது வாழ்க்கையில் இசை இருக்கிறது. ஒரு பாடலை பாடுவதென்பது இங்கே பெரிய விஷயமில்லை. இது தான் இந்தியா. எனவே தான் திரைப்பட பாடல்கள் இங்கே பிரபலமடைகின்றன. ஒரு திரைப்படத்தை பார்க்காவிட்டால் கூட அதில் வரும் சிறந்த பாடல்கள் பார்க்கப்படுகின்றன,” - ஹரிஹரன்

திரைப்படமும் இசையும் சிறந்த முறையில் இணையும் போது நமது அனைத்து புலன்களுக்கும் விருந்தளிக்கிறது. அரங்கம் நிறைந்த இசை மற்றும் நடனமே  இந்திய திரைப்படங்களை ஆக்கிமித்தள்ளன. நடனம், இசை என திரைப்படங்களில் நவரசங்கள் நிறைந்திருக்கின்றன.” - ஹரிஹரன்

பிராந்தியம் சார்ந்த திரைப்படங்கள் அந்நிலத்தை பிரதிபலிப்பதற்கான வாய்ப்பை இசை அமைப்பாளர்களுக்கு வழங்குகின்றன.” - பிக்ரம் கோஷ்

கோவாவில் தற்போது நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த பின்னணி பாடகர் பத்ம ஸ்ரீஹரிஹரன் மற்றும் தபலா கலைஞர் பிக்ரம் கோஷ் ஆகிய இரு இசை மேதைகளுக்கிடையே உரையாடலில் மேற்கண்ட கருத்துகள் வெளிப்பட்டன.

தோர்பாஸ் என்னும் திகில் படத்திற்கு இசையமைத்த தனது அனுபவத்தை பிக்ரம் கோஷ் பகிர்ந்து கொண்டார். ஆப்கானிஸ்தான் பின்னணியில் அமைந்த அந்த திரைப்படத்தின் இசைக்கு மத்திய-கிழக்கு பகுதியின் நாதங்கள் தேவைப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690846

****



(Release ID: 1690932) Visitor Counter : 202