அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2-ம் ஆண்டை நிறைவு செய்தது தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஓடிடி சேனல்
Posted On:
21 JAN 2021 3:35PM by PIB Chennai
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஓடிடி சேனல், 2021 ஜனவரி 15ம் தேதியுடன், 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த டி.வி சேனலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பு நிர்வகிக்கிறது. இணையதளம் மூலமாகவும், காணக்கூடிய இந்த ஓடிடி சேனல் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி தொடங்கப்பட்டது.
மக்கள் இடையே அறிவியல் மனநிலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஓடிடி என்ற நவீன தொழில்நுட்பத்தில் இந்த டி.வி சேனலை விஞ்ஞான் பிரசார் ஒளிபரப்புகிறது. பல அறிவியல் நிகழ்ச்சிகளை, விஞ்ஞான் பிரசார், நீண்ட காலமாக இந்த சேனல் மூலமாக ஒளிபரப்புகிறது. ஒடிடி தொழில்நுட்பம் காரணமாக இந்த சேனல் மக்கள் இடையே மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக கடந்த ஏழு -எட்டு மாத தொற்று காலத்தில், இந்த சேனல் வேகமாக, மிகப் பெரிய அளவில் மக்களிடம் பிரபலம் அடைந்தது.
செல்போன்களில் இந்தியா சயின்ஸ் மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோவில், ஜியோ டி.வி, ஜியோ எஸ்டிபி மற்றும் ஜியோ சாட் மூலமும் இந்த சேனலை பார்க்க முடியும். யு ட்யூப், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றிலும் கீழ்கண்ட இணைப்புகள் மூலம் இந்த சேனலை பார்க்க முடியும்.
YouTube (https://www.youtube.com/c/lndiaScience),
Facebook (https://www.facebook.com/indiasciencetv/),
and
Twitter (https://twitter.com/indiasciencetv).
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690850
********************
(Release ID: 1690930)
Visitor Counter : 219