வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஒழுங்குமுறை பின்பற்றுதல் விவரங்களை தாக்கல் செய்யும் சுமையை குறைப்பதற்கான தளம் தொடக்கம்
Posted On:
20 JAN 2021 5:51PM by PIB Chennai
ஒழுங்குமுறை பின்பற்றுதல் விவரங்களைத் தாக்கல் செய்வதில் மக்களின் சுமையையும், தொழில் துறையினரின் சுமையையும் குறைப்பதற்கான ஒருங்கிணைக்கும் துறையாக செயல்படுமாறு, மத்திய வர்த்தக தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையை, அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான முக்கிய நடவடிக்கையாக, 2021 ஜனவரி 1 அன்று, ஒழுங்குமுறை பின்பற்றுதல் விவரங்களை தாக்கல் செய்வதற்கான முனைய தளத்தை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தொடங்கியது. சுமைமிகுந்த செயல்பாடுகளில் மக்கள், தொழில்கள் மற்றும் அரசுக்கிடையே பாலமாகச் செயல்படுவதே இந்த தளத்தின் நோக்கமாகும். அனைத்து மத்திய மற்றும் மாநில ஒழுங்குமுறை பின்பற்றுதல் விவரங்களுக்கான முதல் களஞ்சியமாகவும் இது செயல்படும்.
அனைத்து மத்திய அமைச்சகங்கள்/ துறைகள் மற்றும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டங்கள்/ விதிமுறைகள்/ விதிகளை ஆய்வு செய்து அவற்றை நவீனப்படுத்துவதற்கான, எளிமைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுப்பார்கள். இந்தத் தகவல்கள் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
சிஐஐ, ஃபிக்கி மற்றும் அசோச்சாம் ஆகிய தொழில் அமைப்புகளின் பங்குதாரர்களும் தங்களது எண்ணங்கள் மற்றும் பரிந்துரைகளை பதிவு செய்யலாம். தொடர்புடைய மத்திய அரசு அதிகாரிகள் இவற்றை ஆய்வு செய்து, விதிகளை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். இத்தளத்தின் செயல்பாடுகள் மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1690454
**********************
(Release ID: 1690543)
Visitor Counter : 273