மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் ஆய்வகத்தை அமேசானுடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமைக்க உள்ளது

Posted On: 19 JAN 2021 6:35PM by PIB Chennai

அமேசான் வெப்சர்வீசஸ் உடன் இணைந்து குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் ஆய்வகத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நமது நாட்டில் அமைக்க உள்ளது. குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகள், ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள், கல்வித்துறையினர் மற்றும் கணினித்துறையில் உள்ளவர்களுக்கு, உற்பத்தி, சுகாதார சேவைகள், வேளாண்மை மற்றும் விமான பொறியியல் ஆகிய துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்காக குவாண்டம் கணினியியலை ஒரு சேவையாக இந்த ஆய்வகம் வழங்கும்.

ஆய்வகத்திற்கு ஹோஸ்டிங், தொழில்நுட்பம் மற்றும் நிரலியல்  ஆதரவை அமேசான் வெப்சர்வீசஸ் வழங்கும். அறிவியல், கல்வி மற்றும் கணினி துறைகளை சேர்ந்த சமூகங்களுக்கு குவாண்டம் கணினியியல் மேம்பாட்டு சூழலியலை அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னுரிமைகளோடு இணைத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த முன்னெடுப்பு வழங்கும்.

வளர்ந்துவரும் துறையான குவாண்டம் கணினியியல், தகவல்களை செயல்படுத்துவதற்கான சக்திவாய்ந்த உபகரணங்களை குவாண்டம் இயந்திரவியலின் விதிகளைப் பயன்படுத்தி கட்டமைக்கும். சாதாரண கணினிகளால் தீர்க்க முடியாத சவாலான சிக்கல்களை தீர்த்து வேதிப் பொறியியல், பொருளறிவியல், மருந்து கண்டுபிடிப்பு, நிதி, இயந்திர கற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளுக்கு இது வழிவகுக்கும்.

**************



(Release ID: 1690171) Visitor Counter : 312


Read this release in: English , Marathi , Hindi