நிதி அமைச்சகம்

மத்திய அரசின் பங்கு, பத்திரங்கள் ஏலம் குறித்த அறிவிப்பு

Posted On: 18 JAN 2021 5:15PM by PIB Chennai

விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ. 2,000 கோடி தொகைக்கான '3.96 சதவிகித அரசுப் பங்கு 2022’, விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.11,000 கோடி தொகைக்கு '5.15 சதவிகித அரசுப் பங்கு 2025’, விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.8,000 கோடி தொகைக்கு '5.85 சதவிகித அரசுப் பங்கு 2030’, விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.6,000 கோடி தொகைக்கான '6.80 சதவிகித அரசுப் பங்கு, 2060’, ஆகியவை தொடர்பான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு  பத்திரங்களுக்கும் எதிராக ரூ.2000 கோடி கூடுதல் சந்தாவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான விருப்பம் இந்திய அரசின் வசம் இருக்கிறது. இதற்கான ஏலம் மும்பையில் உள்ள கோட்டை, மும்பை அலுவலகத்தின் இந்திய ரிசர்வ் வங்கியால் 2021 ஜனவரி 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பல அலகு விலை முறையை உபயோகித்து நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689700

**********************



(Release ID: 1689757) Visitor Counter : 114