தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தனது முதல் படம் ‘விண்டோ பாய் ’ பற்றி விவரித்தார் உருகுவே இயக்குனர் அலெக்ஸ் பிபர்னோ

प्रविष्टि तिथि: 18 JAN 2021 2:52PM by PIB Chennai

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தனது முதல் படம்விண்டோ பாய் வுட் ஆல்சோ லைக் டு ஹேவ் சம்மெரின்’’ பற்றி உருகுவே இயக்குனர் அலெக்ஸ் பிபர்னோ விவரித்தார்.

கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மூன்றாவது நாளில் உருகுவே நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் அலெக்ஸ் பிபர்னோ தனது முதல் படம்விண்டோ பாய்பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.

‘‘உருகுவேயில் இருந்து அர்ஜென்டினாவுக்கு நான் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நமக்குள் இரண்டு இணையான வாழ்க்கை இருப்பதையும், அதை இந்தக் கப்பலால் இணைக்க முடியும் என்பதையும் கண்டறிந்தேன். இது, இரண்டு இணையான உயிர்களையும் இணைக்க முடியும் என்பதை என்னை உணர வைத்தது. 10 ஆண்டுகளாக என் மனதில் இருந்த யோசனையை வைத்து இந்தப் படத்தை உருவாக்கினேன்’’ எனக் கூறினார்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வித்தியாசமான இடங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கிடையில் அற்புதமான சந்திப்புகளின் அழகையும் மர்மத்தையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689673

******

 


(रिलीज़ आईडी: 1689708) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , हिन्दी , Punjabi , English , Marathi