அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் தொழில்நுட்பத் துறை: 2020 ஆண்டு நிறைவு ஒரு பார்வை

Posted On: 18 JAN 2021 9:45AM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் தொழில்நுட்பத் துறை கடந்த 2020-ஆம் ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:

1.       பத்திரிகைகள், ஆராய்ச்சி மேம்பாடு, புதுமையில் இந்தியாவின் தரவரிசை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

2.       ஐந்தாவது தேசிய அறிவியல் தொழில்நுட்பம், புதுமை கொள்கையின் வரைவறிக்கை பொதுமக்கள் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டது.

3.       முடிவெடுக்கும் திறனில் முக்கிய பங்கையும், ஊடகத்தில் கூடுதல் முக்கியத்துவத்தையும், மக்கள் நம்பிக்கையையும் அறிவியல்  தொழில்நுட்பம் பெற்றது.

4.       அறிவியல் தொழில்நுட்பத் துறையின் திட்டங்கள், புதுமை சூழலியலின் அசாதாரண செயல்திறனுக்கு வித்திட்டன.

5.       கொவிட்-19 சுகாதார நெருக்கடி எனும் பெரும் போரை எதிர்கொள்வதற்கான மையம் (சிஏடபிள்யுஏசிஹெச்) என்னும் திட்டத்தின் வாயிலாக பெருந்தொற்றின்போது நெருக்கடியை எதிர் கொள்வதற்கான பல்வேறு தீர்வுகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டு, நிதி அமைப்பின் கூட்டு வலிமை, ஆற்றல், அதன் இன்குபேட்டர் இணைப்பு, புதுமைகள் ஆகியவை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.

6.       பெருந்தொற்றின் ஏற்றத்தையும், இறக்கத்தையும் கணித மாதிரி கணிக்கிறது.

7.       சூப்பர் கம்ப்யூட்டிங்கின் செயல் திறன் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்படுகிறது: தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கம்.

8.       ஆராய்ச்சியாளர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதற்காக அதி நவீன உள்கட்டமைப்பு மையம் உருவாக்கப்பட்டது.

9.       செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணைய அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆகிய புதிய அறிவியல் தொழில்நுட்பத் துறைகள் ஆராய்ச்சிகளின் ஆதரவுடனும், புதுமை மையங்களின் உதவியுடனும் புதிய உத்வேகத்தை அடைந்தன.

10.     இமாலய பல்கலைக்கழகங்களின் சிறப்பு மையங்களும், பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய பத்திரிகைகளும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளைக் குறிப்பிட்டுள்ளன.

11.     பன்முகத்தன்மை, உள்ளார்ந்த, சமநிலை முதலியவற்றிற்கு ஆதரவு வழங்குவதற்காக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

12.     ஸ்ரீ சித்ரா அமைப்பு மேற்கொண்ட செயல்திறன், பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு பேருதவியாக இருந்தது.

13.     தேசிய அளவில் உயர் தரத்திலான புவிசார் வரைபட கணிப்பை இந்திய ஆய்வு நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

14.     ஆராய்ச்சித் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முற்றிலும் பெண் விஞ்ஞானிகளுக்கான செர்ப்-பவர் திட்டம் தொடங்கப்பட்டது.

15.     தொழில்நுட்ப தகவல், முன்கணிப்பு மதிப்பீட்டு கவுன்சில் (டைஃபாக்) தயாரித்த ஆவணத்தில், கொவிட்-19-க்குப் பிந்தைய காலத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் வகையிலான பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப் பட்டது.

16.     இந்திய வானியற்பியல் நிறுவனம், ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  30 மீட்டர் தொலை நோக்கித் திட்டத்தில்  நோபல் பரிசு பெற்றவருடன் கைகோர்த்தனர்.

17.     பீர்பால் சஹ்னி பேலியோசயின்சஸ் நிறுவனம் (பிஎஸ்ஐபி), குறுகிய காலத்தில் அதிக கொவிட்- 19 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்குத் தேவையான பரிசோதனை வசதிகளை அதிகரித்து நாட்டிலேயே உயரிய நிறுவனமாகத் திகழ்ந்தது.

18.     உயரிய பாதுகாப்பு, செயல்திறனுடன் கூடிய குவாண்டம் குறியாக்கவியல் திட்டத்தை இராமன் ஆராய்ச்சிக் கழகம் வெற்றிகரமாக செயல்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689593

******

 

(Release ID: 1689593)


(Release ID: 1689688) Visitor Counter : 273