பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சிறந்த ஆளுகைக்கான ஸ்கோச் சாலஞ்சர் விருதை வென்றது பஞ்சாயத்துராஜ் அமைச்சகம்

Posted On: 16 JAN 2021 6:10PM by PIB Chennai

காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற 70-ஆவது ஸ்கோச் உச்சிமாநாட்டில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சிறந்த ஆளுகையை வழங்கியதற்கான ஸ்கோச் சாலஞ்சர் விருது பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டது. மின் ஆளுகையை பலப்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சிகள், மாற்றும் ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களின் மூலம் சிறப்பான மற்றும் வெளிப்படைத்தன்மையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் இந்த விருதை அமைச்சகத்தின் செயலாளர் திரு  சுனில் குமார் பெற்றுக்கொண்டார்.

பரவலாக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை என்ற முக்கிய தலைப்பில் அவர் உரையாற்றினார். பின்னர் “உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் பொது கொள்கை” என்ற தலைப்பில் நடைபெற்ற குழு விவாதத்தில் பிரதமரின் ஆலோசகர் திரு அமர்ஜித் சின்ஹா, ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு என் என் சின்ஹா, ஸ்கோச் குழுவின் தலைவர் திரு சமீர் கோச்சார் ஆகியோருடன் திரு சுனில் குமார் கலந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689117

                                      ------


(Release ID: 1689194) Visitor Counter : 205
Read this release in: Marathi , English , Urdu , Hindi