சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

தில்லியிலுள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கிருமிநாசினி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Posted On: 16 JAN 2021 6:02PM by PIB Chennai

கூண்டில் அடைக்கப்பட்ட மற்றும் சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகள் ஆகிய இரண்டு வகைகளையும் கொண்ட தில்லியிலுள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சலை கருத்தில் கொண்டு கிருமிநாசினி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையம், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சகம், இந்திய அரசு மற்றும் தில்லி தேசிய தலைநகர் பகுதி அரசின் கால்நடை பராமரிப்பு துறை ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை தேசிய உயிரியல் பூங்கா முழுவதும் பின்பற்றுகிறது.

தேசிய உயிரியல் பூங்காவின் கால்நடை அலுவலர் மற்றும் தில்லி தேசிய தலைநகர் பகுதி அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று, பறவைகளின் கழிவு மற்றும் பூங்காவில் உள்ள குளங்களின் நீர் மாதிரிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தது.

தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பழுப்பு மீன் ஆந்தை ஒன்று உயிரிழந்ததை தொடர்ந்து, அதன் மாதிரிகள் தில்லி தேசிய தலைநகர் பகுதி அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்கு ஆய்வுக்காக அனுப்பட்டுள்ளன.

பறவை காய்ச்சலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, கூண்டில் உள்ள பறவைகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689113

-----



(Release ID: 1689154) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Hindi , Punjabi