புவி அறிவியல் அமைச்சகம்

146-வது நிறுவன தினத்தை இந்திய வானிலைத் துறை கொண்டாடியது

Posted On: 15 JAN 2021 7:57PM by PIB Chennai

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் நாட்டின் மிகத்தொன்மையான அறிவியல் சேவை நிறுவனங்களில் ஒன்றான இந்திய வானிலைத் துறை, தனது 146-வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடியது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், புவி அறிவியல் துறையின் செயலாளர் டாக்டர் எம் ராஜீவன், இந்திய வானிலை துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருத்யுஞ்ஜய் மொகபாத்ரா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உத்தரகாண்டில் உள்ள முக்தேஸ்வர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குஃப்ரியில் டாப்லர் வானிலை ராடார்களை டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார். இஸ்ரோவுடன் இணைந்து இந்திய வானிலைத் துறையால் உருவாக்கப்பட்ட பல்நோக்கு வானிலை தரவு பெறுதல் மற்றும் செயல்முறைப்படுத்தும் அமைப்பையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பேரிடர் மேலாளர்களுக்கும், கைலாஷ் மானசரோவர் மற்றும் சார் தாம் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கும் சிறப்பான ஆதரவை அதி நவீன டாப்லர்

வானிலை ராடார்கள் வழங்கும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688891

                                                                       ------


(Release ID: 1688958)
Read this release in: English , Urdu , Hindi , Manipuri