நிதி அமைச்சகம்

ரூ 14.30 கோடி ஜிஎஸ்டி மோசடி: ஒருவர் கைது

Posted On: 15 JAN 2021 6:45PM by PIB Chennai

போலி ரசீதுகளின் மூலம் செய்யப்படும் உள்ளீட்டு வரி கடன் மோசடியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, சுமார் ரூ 79.5 கோடி மதிப்பில் போலி ரசீதுகள் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்றை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையகம், தில்லி (கிழக்கு) அதிகாரிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர்.

தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மூலம் மூன்று நிறுவனங்களை தொடங்கி பட்டயக் கணக்காளர் திரு நிதின் ஜெயின் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்நிறுவனங்கள் மூலம் ரூ 14.30 கோடி போலி உள்ளீட்டு வரி கடன் மோசடியை திரு ஜெயின் செய்துள்ளது கண்டறியப்பட்டது.

2020 டிசம்பர் 16 முதல் தலைமறைவாக இருந்த திரு ஜெயின், 2021 ஜனவரி 13 அன்று விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி, மோசடியில் ஈடுபடுவதற்காக தனது தந்தை மற்றும் மனைவியின் பெயர்களில் போலி நிறுவனங்களை தொடங்கியதை ஒப்புக்கொண்டார்.

ஏற்கனவே, இதே போன்ற இரண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் திரு நிதின் ஜெயினுடன் அவர்களுக்குள்ள தொடர்பை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட திரு ஜெயின் 2021 ஜனவரி 27 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடப்பாண்டில் போலி ரசீதுகள் மூலம் நடைபெற்ற மோசடிகளின் மதிப்பு ரூ 3684.46 கோடி என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688852

-----



(Release ID: 1688949) Visitor Counter : 160


Read this release in: Urdu , English , Hindi