உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பிராந்திய இணைப்பு திட்டம்-உடானின் கீழ் `ஹிசார் விமான நிலையம் திறக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
14 JAN 2021 4:26PM by PIB Chennai
ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்ட ஹிசார் விமான நிலையத்திற்கு இந்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டம்-உடானின் கீழ் முதல் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் கட்டார் முதல் விமானத்தை தொடங்கிவைத்தார்.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உடான் திட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்கு வந்துள்ள 54-வது விமான நிலையம் இதுவாகும். 307 உடான் வழித்தடங்கள் மற்றும் ஐந்து ஹெலிபோர்ட் மற்றும் இரண்டு நீர் விமான நிலையங்கள் உள்ளிட்ட 54 விமான நிலையங்கள் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஹரியானா அரசுக்கு சொந்தமான ஹிசார் விமான நிலையம், 18 இருக்கை ரக விமானங்களுக்கு ஏற்றவகையில் பொது உரிம விமான நிலையமாக அமைந்துள்ளது
மேலும் விவரங்களுக்குhttps://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688549
-----
(रिलीज़ आईडी: 1688619)
आगंतुक पटल : 290