புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2020 நவம்பர் மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண்
Posted On:
12 JAN 2021 5:30PM by PIB Chennai
தொழில் உற்பத்திக் குறியீட்டின் (ஐஐபி) விரைவு மதிப்பீடுகள், ஆறு வாரங்கள் இடைவெளியுடன் ஒவ்வொரு மாதத்தின் 12-ஆம் தேதியன்று (அல்லது அதற்கு முந்தைய வேலை நாளன்று), ஆதார முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.
நவம்பர் 2020-க்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண் (2011-12 என்னும் அடிப்படையில்) 126.3 ஆக இருக்கிறது. சுரங்கங்கள், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளின் 2020 நவம்பர் மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீட்டெண்கள், முறையே 104.5, 128.4 மற்றும் 144.8 ஆக உள்ளன. தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி இந்த துரித மதிப்பீடுகள் இனிவரும் அறிக்கைகளில் மாற்றங்களைக் காணும்.
பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பிரிவில் 2020 நவம்பர் மாதத்திற்கான முதன்மைப் பொருட்களுக்கான குறியீட்டு எண் 121.3 ஆகவும், மூலதனப் பொருட்களுக்கு 84.6 ஆகவும், இடைநிலைப் பொருட்களுக்கு 136.7 ஆகவும் உள்கட்டமைப்பு/ கட்டுமான பொருட்களுக்கு 135.5 ஆகவும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687965
****************
(Release ID: 1688023)
Visitor Counter : 198