பாதுகாப்பு அமைச்சகம்
லடாக்கில் உள்ள முன்னணி தளங்களுக்கு விமானப் படை தலைமை தளபதி பயணம்
प्रविष्टि तिथि:
11 JAN 2021 7:54PM by PIB Chennai
லடாக் பகுதியில் உள்ள விமானப்படைத் தளங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் ஆகியவற்றை விமானப் படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா 2021 ஜனவரி 11 அன்று பார்வையிட்டார்.
விமானத் தளங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ததோடு, இந்த இடங்களில் செயல்பட்டு வரும் போர்ப்படைப் பிரிவுகளில் உள்ள விமானப் படை வீரர்களுடனும் விமானப் படை தளபதி கலந்துரையாடினார்.
தோய்சுக்கு பயணம் மேற்கொண்ட அவர், குளிர்காலத்தின் போது படையினருக்கு ஆதரவளிப்பதற்காக நடைபெற்று வரும் போக்குவரத்து செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
------
(Release ID 1687702)
(रिलीज़ आईडी: 1687742)
आगंतुक पटल : 200