எரிசக்தி அமைச்சகம்

30-வது தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள் : மத்திய மின்சக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் வழங்கினார்

Posted On: 11 JAN 2021 6:29PM by PIB Chennai

எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகத்துடன் இணைந்து, 30-வது தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள் நிகழ்ச்சியை மத்திய மின்சக்தி அமைச்சகம் நடத்தியது. மத்திய மின்சக்தி, புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர் கே சிங், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கொவிட் பெருந்தொற்றின் காரணமாக, விக்யான் பவனில் இருந்து ஹைப்ரிட் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பங்குதாரர்களும் விருது வென்றவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எரிசக்தி சிக்கனத்தில் செய்துள்ள சாதனைகள் குறித்த காணொலி கண்காட்சியும் நடைபெற்றது. பல்வேறு தொழில்கள் மற்றும் துறை ரீதியான நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின்போது, காற்று அழுத்திகள் மற்றும் அல்ட்ரா ஹை டெபனிஷன் தொலைக்காட்சிகளுக்கான தரநிலை மற்றும் சான்றளிப்பு திட்டம் தன்னார்வ முறையில் தொடங்கப்பட்டது. மாநில அளவிலான நடவடிக்கைகளுக்கான `சாத்தி எனப்படும் மாநில முகமைக்கான இணையதளமும் தொடங்கப்பட்டது.

 

விருது வென்றவர்களை வாழ்த்திய திரு ஆர் கே சிங், பெருந்தொற்றின் போது கடினமான காலங்களை துணிச்சலோடு நாம் எதிர் கொண்டோம் என்று கூறினார். ஊரடங்கின் போது மின்சாரத் துறை தொடர்ந்து செயல்பட்டதாக அவர் கூறினார். மின்சார சிக்கனம் என்பது உலகத்துக்கு மட்டுமில்லாது தொழிற்சாலைகளுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தனிமனித மாசும், தனிமனித மின்சார நுகர்வும் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் கூறினார்.

ஆண்டு இலக்குகளுக்கான மாநில வாரியான நடவடிக்கைகள் மற்றும்  முன்னேற்றத்திற்கான சாத்தி என்னும் நிர்வாக தகவல் அமைப்பு தளத்தை எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மின்சாரத்துக்கு சிக்கனத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநில அளவில் உடனுக்குடன் கண்காணிக்கலாம்.

விருது வென்றவர்களின் பட்டியலுக்கும் மேலும் தகவல்களுக்கும் கீழ்க்கண்ட இணைப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687682

------



(Release ID: 1687735) Visitor Counter : 250


Read this release in: English , Urdu , Hindi , Punjabi