புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளின் மதிப்பீடு (நெகாவ்ஸ்) இந்தியா கூட்டமைப்பு -2021
प्रविष्टि तिथि:
08 JAN 2021 5:24PM by PIB Chennai
நெகாவ்ஸ் இந்திய கூட்டமைப்பை - 2021 புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நடத்தி வருகிறது. இந்த நெகாவ்ஸ் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நிதியுதவி அளிக்கிறது. இத்திட்டத்தை ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை கூட்டு செயலகம்(சிபிடி) ஆகியவை இணைந்து அமல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் பங்கெடுத்துள்ள 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ இதர நாடுகள்.
இந்தியாவில், நெகாவ்ஸ் திட்டத்தை, மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய தொலை உணர்வு மையம் ஆகியவற்றுடன் இணைந்து அமல்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட பல்வேறு பங்குதாரர்களை - அதாவது தயாரிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் கணக்குகளைப் பயன்படுத்தும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரை இணைப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த, அனைத்து பங்குதாரர்களையும், ஒரு ஆலோசனை செயல்முறை மூலம் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க செயலகம் ஒருங்கிணைத்துள்ளது.
இந்த திட்டத்தில் பங்கேற்பது ஐ.நா.-சுற்றுச்சூழல் பொருளாதார கணக்கு முறை திட்டப் படி, சுற்றுச்சூழல் கணக்குகளின் தொகுப்பைத் தொடங்கவும், சுற்றுச்சூழல் கணக்குகளை “என்விஸ்டாட்ஸ் இந்தியா” இதழில் 2018 முதல் ஆண்டு அடிப்படையில் வெளியிடவும் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்துக்கு உதவியுள்ளது. இந்த கணக்குகளில் பல, சமூக மற்றும் பொருளாதார பண்புக்கூறுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை மற்றும் , அவை கொள்கைக்கு ஒரு பயனுள்ள கருவியாக இருக்கின்றன. இந்த வெளியீட்டை கீழ்கண்ட இணைப்பில் காண முடியும். https://mospi.gov.in/web/mospi/reports-publications .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687110
**********************
(रिलीज़ आईडी: 1687202)
आगंतुक पटल : 343