புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
ஆண்டு தேசிய வருமானம் 2020- 2021, முதல் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகள்
Posted On:
07 JAN 2021 5:30PM by PIB Chennai
மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்துதல் அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2020-2021 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
2020-21-ஆம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அல்லது நிலையான விலை மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ 134.40 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 2019-2020-ஆம் ஆண்டின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டின்படி இது 145.66 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2020-2021-ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020-ஆம் ஆண்டில் இது 4.2 சதவீதமாக இருந்தது.
தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையிலான 2020-2021-ஆம் ஆண்டுக்கான ஜிடிபி ரூ 194.82 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020-ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி இது 203.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2020-21-ஆம் ஆண்டில் -4.2 சதவீதம் என்னும் அளவில் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர் வருமானம் மற்றும் இதர விவரங்கள் அறிக்கைகள் 1 முதல் 4 வரையில் வழங்கப்பட்டுள்ளன.
1 ஜூலை 2017 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வரிக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட இதர மாற்றங்கள் காரணமாக மொத்த வரிவருவாய், ஜிஎஸ்டி அல்லாத வருவாய் மற்றும் ஜிஎஸ்டி வருவாய் என்ற இரண்டையும் உள்ளடக்கியதாக உள்ளது.
நிலையான விலைமதிப்புள்ள பொருள்களுக்கான வரியைப் பெறுவதில் வால்யூம் எக்ஸ்ட்ராபொலேஷன் என்ற முறைப்படி எண்ணிக்கையில் வளர்ச்சியைப் பொறுத்து வரி விதிக்கப்படும். பொருட்களுக்கும், சேவைகளுக்கும் ஆன வரி கணக்கிடப்பட்டு, மொத்த வரி அளவு கணக்கிடப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686824
----
(Release ID: 1686925)
Visitor Counter : 307