அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர்-என்ஐஎல் தயாரித்த, உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு ஒப்புதல்

Posted On: 05 JAN 2021 8:30PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-தேசிய வானூர்தி ஆய்வகத்தை (சிஎஸ்ஐஆர்-என்ஐஎல்) சேர்ந்த விஞ்ஞானிகள், சிஎஸ்ஐஆர்- ஐஜிஐபி மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள சுவஸ்த் வாயு என்னும் உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அமைத்த நிபுணர் குழு இந்த சுவாசக் கருவியை பரிசோதித்து, இதை 35 சதவீதம் வரை பிராணவாயு உதவி தேவைப்படும் கொவிட் நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சான்று அளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686357

**********************(Release ID: 1686366) Visitor Counter : 189