கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய நவீன கலைக்கூடத்தில் படைப்புத்திறன் மிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த வருடம் நடக்கவிருக்கின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
01 JAN 2021 6:50PM by PIB Chennai
தனது புல்வெளி மற்றும் கலைக்கூடங்களை நாளை முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் அவர்களுக்கான அருங்காட்சியக அனுபவத்தை தேசிய நவீனக் கலைக்கூடம் மேம்படுத்தவிருக்கிறது.
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை எந்த விதக் கட்டணமும் இல்லாமல் பொதுமக்களுக்காக இவை திறந்திருக்கும். சிறப்புக் காட்சிகள், கலை மற்றும் புகைப்பட நிகழ்வுகள், திரைப்படக் காட்சிகள், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள், பட்டறைகள் ஆகியவற்றை தேசிய நவீனக் கலைக்கூடம் நடத்தும்.
புகழ்பெற்ற கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனான உரையாடல்களும் நடைபெறும். நாளை பிற்பகல் 2 மணிக்கு பிரபலக் கலைஞர் திரு. ஜதின் தாஸ் வரைதல் குழுவை தொடங்கி வைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685433
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1685496)
வருகையாளர் எண்ணிக்கை : 133