நிதி அமைச்சகம்

ஆசிய வளர்ச்சி வங்கியுடன் கடன் ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது

Posted On: 01 JAN 2021 5:38PM by PIB Chennai

அசாமில் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக 231 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இந்தியா 2020 டிசம்பர் 30 அன்று கையெழுத்திட்டது.

இதன் மூலம், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை அதிகப்படுத்துவதற்காக 120 மெகாவாட் திறனுடைய ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார ஆலை நிறுவப்படும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மொகபத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியத் திட்டத்தின் பொறுப்பு அதிகாரி திரு. ஹோ யுன் ஜியோங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தோட்டக்கலை விரிவாக்கத்திற்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 2020 டிசம்பர் 30 அன்று இந்தியா கையெழுத்திட்டது.

இதன் மூலம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள விவசாயக் குடும்பங்களின் வருவாயை தோட்டக்கலை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மொகபத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியத் திட்டத்தின் பொறுப்பு அதிகாரி திரு. ஹோ யுன் ஜியோங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்புகளைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685402

                                                        ----- 

(Release ID: 1685463) Visitor Counter : 116

Read this release in: English , Urdu , Hindi