வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நவம்பர் 2020-இல் முக்கியமான எட்டு தொழில்களின் குறியீட்டு எண்கள் (அடிப்படை: 2011-12 = 100)

இடுகை இடப்பட்ட நாள்: 31 DEC 2020 5:00PM by PIB Chennai

பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத்துறை, முக்கியமான எட்டு தொழில்களின் 2020 நவம்பர் மாதத்திற்கான குறியீட்டு எண்ணை வெளியிடுகிறது.

2020 நவம்பர் மாதத்தில் எட்டு முக்கியமான தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு 125.9 ஆக இருந்தது, இது 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2.6 (தற்காலிக) சதவீதம் குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி -11.4 சதவீதம் ஆகும்.

ஆகஸ்ட் 2020-க்கான முக்கியமான எட்டு தனித் தொழில்களில் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் - 6.9 சதவீதம் ஆக திருத்தப்பட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் (IIP) சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின்  மதிப்பில் முக்கியமான எட்டு தனித் தொழில்கள் 40.27 சதவீதம் உள்ளன. வருடாந்திர / மாதாந்திரக் குறியீட்டு மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.

 

முக்கியமான எட்டு தொழில்களில் (ஒட்டுமொத்த) மாதாந்திரக் குறியீட்டு எண் மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685100

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1685223) வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri