புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்: ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் - 2020

Posted On: 31 DEC 2020 2:23PM by PIB Chennai

கோவிட்-19 சவால்களுக்கு இடையிலும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை 2020-ஆம் ஆண்டு தொடர்ந்து வளர்ச்சியைக் கண்டது. நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் அக்டோபர் 2020-இல் 89.63 ஜிகாவாட்டை தொட்டது.

ரூ.34,035 கோடி திருத்தப்பட்ட நிதி ஆதரவுடன், 2020-ஆம் ஆண்டுக்குள் 30.8 ஜிகாவாட்டை எட்டுமாறு பிரதமர் - குசும் திட்டத்தின் இலக்கு அதிகரிக்கப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, உயர் திறன் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி அணுகல் ஆகியவற்றை எட்டும் வகையிலும், தேசியப் பொருளாதாரத்தின் கரியமலத் தடங்களைக் குறைக்கும் விதத்திலும், துடிப்பான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

 

மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடாக கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா உயர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 2.5 மடங்கும், சூரிய சக்தித் திறன் 13 மடங்கும் அதிகரித்துள்ளன.

கோவிட்-19 கடும் சவால்களை விடுத்த போதிலும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுத்தது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் காலக்கெடுவை நீட்டிப்பதற்கும், வங்கி உத்தரவாதங்களை விடுவிப்பதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. எரிசக்தி ஆலையை நிறுவுவதற்கு தேவைப்படும் பொருள்களுக்கான இறக்குமதிச் சலுகைக்கான பட்டியலை அமைச்சகம் தயாரித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், வழிகாட்டுவதற்காகவும் திட்ட வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி வசதிகள் நிறுவ ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களை இந்த மையம் தொடர்பு கொண்டு வருகிறது.

அந்நிய நேரடி முதலீட்டு மையம் ஒன்று அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இந்திய நிறுவனங்களை சந்தர்ப்பவாதமாக கைப்பற்றும் போக்கை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685046

**********************

(Release ID: 1685046 )



(Release ID: 1685164) Visitor Counter : 251


Read this release in: English , Hindi , Punjabi