பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2020-இல் மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் - ஒரு பார்வை

Posted On: 31 DEC 2020 2:23PM by PIB Chennai

2020-ஆம் ஆண்டில், மத்தியப் பணியாளர் , பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் மேற்கொண்ட பணிகள்: 

* தேசிய பணியாளர் தேர்வு முகமையை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசுப் பணிகளுக்கான பணியாளர் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வர இது வழிவகுத்தது.

* இதற்காக மத்திய அரசு ரூ.1,517.57 கோடி ஒதுக்கியது.

* இந்தியக் குடிமைப் பணியாளர்கள் திறன் மேம்பாட்டுக்காக கர்மயோகி திட்டத்தைதொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. குடிமைப் பணி அதிகாரிகளை எதிர்காலத்தில் திறம்படவும், ஆக்கப்பூர்வமாகவும் பணியாற்ற வைப்பதே  இந்த கர்மயோகி திட்டத்தின் நோக்கம். 

ஓய்வூதியதார்கள் தபால்காரர் மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடங்கப்பட்டது. இச்சேவை ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்த படியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வழி செய்தது. அது அவர்களுக்கு மிகப் பெரிய நிவாரணத்தை அளித்தது.

* ஆயுள் சான்றிதழை ஜீவன் பிரமான்இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கும் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திரமோடி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

* பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்க பிரதமர் விருதுகள் வழங்கும் திட்டத்தையும் அதற்கான இணையதளத்தையும் (www.pmawards.gov.in) மத்தியப் பணியாளர் துறை அமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் கடந்த ஜூலை மாதம் தொடங்கி வைத்தார்.

* மாவட்ட ஆட்சியாளர்களின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டது.

 * நாட்டில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டது.

* மத்திய அரசுப்பணிகளில் குரூப் -பி மற்றும் சி அதிகாரிகளுக்கு நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முறை மற்ற மாநிலங்களில் பின்பற்றப்பட்டது.

 * மூன்று புதிய தகவல் ஆணையர்கள் கடந்த நவம்பரில் பதவி ஏற்றனர். இவர்களுக்குத் தலைமை தகவல் ஆணையர் திரு. வி.கே.சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மத்திய தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685044

**********************



(Release ID: 1685154) Visitor Counter : 205


Read this release in: English , Hindi , Punjabi