நிதி அமைச்சகம்

பொதுக்கடன் மேலாண்மை குறித்த காலாண்டு அறிக்கை – ஜுலை முதல் செப்டம்பர் 2020 வரை

Posted On: 31 DEC 2020 11:31AM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறையின் பட்ஜெட் பிரிவின் கீழ் செயல்படுகின்ற பொதுக்கடன் மேலாண்மை அலகு (பிடிஎம்சி) 2010-11-ஆம் ஆண்டில் ஏப்ரல்ஜுன் (காலாண்டு 1) முதல் தொடர்ச்சியாக கடன் மேலாண்மை குறித்த காலாண்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறதுதற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஜுலைசெப்டம்பர் 2020 (காலாண்டு 2 நிதியாண்டு 21) காலகட்டத்துக்கு உரியதாகும்.

நிதியாண்டு 2021 காலாண்டு 2- இல் மத்திய அரசு ரூ.4,20,000 கோடி மதிப்புக்கு பிணையப் பத்திரங்களை வெளியிட்டது.

 நிதியாண்டு 2020-இன் காலாண்டு 2-இல் ரூ.1,72,160 கோடி மதிப்பில் பிணையப் பத்திரங்களை வெளியிட்டு இருந்தது. முதல் வெளியீட்டின் மதிப்புக் கூட்டல் சராசரியானது நிதியாண்டு 2021 காலாண்டு 1-இல் 5.85 சதவிகிதம் என இருந்தது நிதியாண்டு 2021 காலாண்டு 2-இல் 5.80 சதவிகிதமாகக் குறைந்துள்ளதுதேதியிட்ட பிணையப் பத்திரங்களின் முதல் வெளியீட்டுக்கான மதிப்புக் கூட்டல் சராசரி முதிர்வு என்பது நிதியாண்டு 21 காலாண்டு 1 இன் 14.61 ஆண்டுகள் என்பதோடு ஒப்பிட நிதியாண்டு 2021-காலாண்டு 2இல் 14.92 ஆண்டுகளாகி உள்ளது. ஜூலை- செப்டம்பர் 2020 காலகட்டத்தில் மத்திய அரசு நிதி மேலாண்மை பில்களை வெளியிட்டதன் மூலம் எந்த தொகையையும் ஈட்டவில்லைஎம்எஸ்எஃப் உள்ளிட்ட பணப்புழக்கச் சீரமைப்பு வசதியின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நிகர சராசரிப் பணப்புழக்கம் என்பது இந்தக் காலகட்டத்தில் ரூ.3,49,954 கோடியாக இருந்தது.  

அரசின் மொத்தக் கடன் பொறுப்பு (பொதுக்கணக்கின் கீழ் வருகின்ற கடன் பொறுப்புடைமை உள்ளிட்டவை) ஜுன் 2020- இல் முடிவடைந்த காலகட்டத்தில் ரூ.1,01,35,600 கோடியில் இருந்து செப்டம்பர் 2020 அன்று முடிவடைந்த காலகட்டத்தில் ரூ.1,07,04,294 கோடி என்ற அளவில் அதிகரித்ததுசெப்டம்பர் 2020 அன்று முடிவடைந்த காலகட்டத்தில் மொத்த நிலுவைக் கடன் பொறுப்பில் 91.1 சதவிகிதம் பொதுக்கடன் சார்ந்தது ஆகும்நிலுவையில் உள்ள தேதியிட்ட பிணையப் பத்திரங்களில் சுமார் 29.1 சதவிகிதம் 5 ஆண்டு காலத்துக்குள் முதிர்வடையும் நிலையில் உள்ளன. செப்டம்பர் 2020 முடிவில் பங்கு கைக்கொள்ளும் முறையானது வர்த்தக வங்கிகளுக்கு 38.6 சதவிகிதம் பங்கு என்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 25.3 சதவிகிதம் பங்கு என்றும் தெரிவிக்கிறது.

பொதுக்கடன் மேலாண்மை காலாண்டறிக்கைஜுலைசெப்டம்பர் 2020-  https://dea.gov.in/sites/default/files/Quarterly%20Report%20on%20Public%20Debt%20Management%20for%20the%20Quarter%20Jul%20-%20Sep%202020.pdf என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684979

•••••


(Release ID: 1685070)