விவசாயத்துறை அமைச்சகம்

கரீப் பருவ நெல் கொள்முதல் கடந்த ஆண்டைவிட 24.90 சதவீதம் அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 DEC 2020 6:56PM by PIB Chennai

கரீப் பருவ நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 24.90 சதவீதம் அதிகரித்துள்ளது

கரீப் நெல் கொள்முதல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 28ஆம் தேதி வரை 462.88 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே கால கொள்முதலை விட 24.90 சதவீதம் அதிகம்.

இந்த கரீப் பருவக் கொள்முதல் மூலம் சுமார் 54.47 இலட்சம் விவசாயிகள், ரூ.87,391.98 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

மாநிலங்கள் வேண்டுகோள் படி, 51.66 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் தேதி வரை 239845.87  மெட்ரிக் டன்  பாசிப்பயறு, உளுந்து, கடலை, சோயாபீன்ஸ் ஆகியவை 1,29,760 விவசாயிகளிடமிருந்து ரூ.1283.95 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.

கடந்த 28ஆம் தேதி வரை 6956291 பருத்திக் கட்டுகள், ரூ.20391.36 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684442

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1684508) வருகையாளர் எண்ணிக்கை : 161
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi