புவி அறிவியல் அமைச்சகம்

3500 மீட்டர் உயரத்தில் லே-இல் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை டாக்டர். ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார்

Posted On: 29 DEC 2020 6:25PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், லே-இல் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. ராதாகிருஷ்ண மாத்தூர் இந்நிகழ்ச்சியின் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். இல்லடா நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜம்யங் செரிங் நம்கியாலும் இதில் பங்கேற்றார்.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம். ராஜீவன், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர். விபின் சந்திரா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லே-இல் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை மையம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் ஆகும்.

இதைத் திறந்து வைத்துப் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த மையம், வானிலை தொடர்பான விஷயங்களில் லடாக் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

இதற்கிடையே, தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு தயாரித்த தற்சார்பு இந்தியாவுக்கான செயல்திட்டம் என்னும் அறிக்கையை டாக்டர். ஹர்ஷ் வர்தன் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் இலட்சியம், கோவிட் பெருந்தொற்றின் போது நம்முடன் உறுதியுடன் நின்றதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்புகளைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684426

                                                                                             -----



(Release ID: 1684507) Visitor Counter : 199


Read this release in: English , Urdu , Hindi