ரெயில்வே அமைச்சகம்

நல்லாட்சி நாளன்று, மராத்வாடா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் முதல் பெட்டியை ரயில்வே தயாரித்தது

Posted On: 26 DEC 2020 8:45PM by PIB Chennai

கொரோனா காரணமாக ஏற்பட்ட அனைத்துத் தடைகளையும் தாண்டி, நல்லாட்சி நாளன்று (2020 டிசம்பர் 25), மராத்வாடா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் முதல் பெட்டிக்கான கூட்டை இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் தயாரித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க காலத்தில் வருடத்திற்கு 250 ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் விதத்தில் இந்தத் தொழிற்சாலை வடிவமைக்கப்பட்டது.

ஆனால், இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் விலையான ரூ.120 கோடி உடன் சேர்த்து இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683895

-----




(Release ID: 1683910) Visitor Counter : 185


Read this release in: English , Urdu , Hindi , Marathi