குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த, கையால் செய்யப்படும் மோன்பா காகிதத் தொழிலுக்குப் புத்துயிர் அளித்தது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்

Posted On: 26 DEC 2020 3:49PM by PIB Chennai

ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் மோன்பா காகிதத் தொழிலுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் புத்துயிர் அளித்துள்ளது.

அழிவின் விளிம்பில் இருந்த இந்தப் பழம்பெரும் கலை, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளின் காரணமாக தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கையால் செய்யப்படும் மோன்பா காகிதத் தொழில், கடந்த 100 வருடங்களில் அதன் முக்கியத்துவத்தை மெல்ல மெல்ல இழந்தது.

தற்போது மோன்பா காகித ஆலை ஒன்றை தவாங்கில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அமைத்துள்ளது.

உள்ளூர் மக்கள் மற்றும் அலுவலர்களின் முன்னிலையில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு.வினய் குமார் சக்சேனா இந்த ஆலையைத் திறந்து வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683797

                                                                      -----


(Release ID: 1683899)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi