ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் 22 திட்டங்களை நிறைவு செய்து 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
26 DEC 2020 2:38PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறை குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்த வருடம் செய்துள்ளது.
தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் 22 திட்டங்களை நிறைவு செய்து ரூ.557.83 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கழிவுநீர் உள்கட்டமைப்பு, படித்துறை, சுடுகாடு, மாசு கட்டுப்படுத்துதல், வனங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர்த் தன்மையைப் பேணுதல் உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் அடங்கும்.
2020 செப்டம்பர் 15 அன்று ஒரு நாளைக்கு 43 மில்லியன் லிட்டர் திறன் உள்ள பேயூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஒரு நாளைக்கு 37 மில்லியன் லிட்டர் திறன் உள்ள கர்மலிச்சாக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை பாட்னாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ரூ.10,211 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அணைப் புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான அலுவலர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான பொது நிர்வாகத்தில் சிறப்பான சேவைக்கான பிரதமரின் விருதுகளில் நமாமி கங்கே இணைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீர் சேமிப்பை மேம்படுத்துவதற்காக 'மழையைப் பிடியுங்கள்' என்னும் சிறப்புப் பிரச்சாரம் தேசிய தண்ணீர் இயக்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1683785
-----
(Release ID: 1683820)
Visitor Counter : 239