அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குடியரசுத் துணைத் தலைவரின் உரையுடன் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா-2020 நிறைவடைந்தது
Posted On:
25 DEC 2020 7:24PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவின் உரையுடன் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா-2020 இன்று மாலை நிறைவடைந்தது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிk குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர். சேகர் சி மான்டே உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நாயுடு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதை சாத்தியமாக்கிய விஞ்ஞானிகளுக்குத் தமது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா வைரஸ், சிகிச்சை மற்றும் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன. விவேகமாக சிந்திக்கும் மக்கள் இது போன்ற பொய்த் தகவல்களை நம்பக் கூடாது.
மனித முன்னேற்றத்துக்கான உயிர்நாடியாக அறிவியல் உள்ளது. அறிவியல் மனநிலையை வளர்ப்பது நமது அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இந்த மனநிலையை நாம் பயன்படுத்தினால், வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தலாம் மற்றும் தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்,” என்றார்.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா ஒரு அறிவியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று கூறிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், சிறப்பாகத் திட்டமிடப்பட்ட தனது நிகழ்ச்சிகளின் மூலம், அறிவியலுக்கும், மக்களுக்குமான தொடர்பை இத்திருவிழா ஆழமானதாக ஆக்கி வருவதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683683
------
(Release ID: 1683711)
Visitor Counter : 157