அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், கலைகளையும் அறிவியலையும் ஒன்றிணைக்குமாறு வலியுறுத்தினர்
Posted On:
25 DEC 2020 3:14PM by PIB Chennai
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஆறாவது பதிப்பில் 13 புதிய நிகழ்ச்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. 'அறிவியல் மற்றும் நிகழ் கலைகள்' அவற்றில் ஒன்றாகும்.
பாட்டு, கருவிகள் மூலம் உருவாகும் இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தற்கால அறிவியலின் துணை கொண்டு ஆராய்வது இதன் நோக்கமாகும்.
இதில் பங்கேற்றவர்கள் கலைகளையும், அறிவியலையும் ஒன்றிணைக்குமாறு வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிk குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர். சேகர் சீ மான்டே, பல்வேறு நிகழ் கலை வடிவங்களை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, 2020 டிசம்பர் 22-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 25 வரை மெய்நிகர் தளத்தில் நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் திருவிழா இதுவாகும்.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் படிக்கவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683582
------
(Release ID: 1683646)