புவி அறிவியல் அமைச்சகம்
இரண்டு வாரங்களுக்கான வானிலை நிலவரம் (டிசம்பர் 24 முதல் ஜனவரி 6 வரை)
Posted On:
25 DEC 2020 2:08PM by PIB Chennai
தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் ஒரு சில இடங்களில் ஜனவரி முதல் வாரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல் வாரத்தில் மழை: (2020 டிசம்பர் 24 முதல் டிசம்பர் 30 வரை)
மேற்கு திசை காற்றழுத்தம் காரணமாக மேற்கு இமயமலைப்பகுதியில் ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்ஜிட், பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் பரவலாக மழைப்பொழிவு, பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வடமேற்கை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பரவலாக மழைப் பொழிவு/பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழை இயல்புக்குக் குறைவாக இருக்கும்.
இரண்டாவது வாரத்தில் மழை: (2020 டிசம்பர் 31 முதல் 2021 ஜனவரி 6 வரை)
கிழக்கு - மேற்கு திசை காற்று காரணமாக மத்திய இந்திய மற்றும் வடக்கு சமவெளிப் பகுதியில் வார இறுதியில் லேசான தூரல் நிலவும். தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் மழைப்பொழிவு இயல்புக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்கு இமயமலைப் பகுதியில் மழை/பனிப்பொழிவு இயல்புக்குக் குறைவாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683570
----
(Release ID: 1683598)
Visitor Counter : 144