சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ராஜஸ்தானில் 18 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு திரு. நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்
Posted On:
24 DEC 2020 5:05PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்; சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சர் திரு.நிதின் கட்கரி, ராஜஸ்தானில் 18 நெடுஞ்சாலைத் திட்டங்களைக் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் அனைத்து சாலைத் திட்டங்களையும் பரிசீலிப்பதாக உறுதி அளித்த திரு.கட்கரி, விரைவான ஒப்புதலுக்காக அனைத்து முன்மொழிதல்களையும் தமக்கு நேரடியாக அனுப்புமாறு ராஜஸ்தான் முதல்வரைக் கேட்டுக் கொண்டார்.
ராஜஸ்தான் முதல்வர் திரு.அசோக் கெலாட் இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றார். மத்திய அமைச்சர்கள் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், ஜெனரல் (ஓய்வு) வி. கே. சிங், திரு. அர்ஜுன் ராம் மேகவால், திரு. கைலாஷ் சவுத்ரி மற்றும் மாநில அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்டத் திட்டங்களின் மூலம் 1127 கிலோ மீட்டர்களுக்கு சாலைகள் அமைக்கப்படும். இதற்கான செலவு ரூபாய் 8,341 கோடி ஆகும். ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தச் சாலைகள் வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683338
------
(Release ID: 1683417)
Visitor Counter : 140