அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ டாக்டர் ஹர்ஷ் வர்தன் முன்னிலையில் பிரதமர் துவக்கி வைத்தார்

Posted On: 22 DEC 2020 7:01PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

காணொலி மூலம் இந்த வருடம் நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020, டிசம்பர் 22 முதல் 25 வரை நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் புதுமையில் இந்தியா வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ளது என கூறினார். நமது விஞ்ஞானிகள், சாதனை ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். உலகளாவிய பிரச்னைகளை தீர்ப்பதில், நமது தொழில்நுட்ப துறை முன்னணியில் உள்ளது. ஆனால், இந்தியா இன்னும் அதிகம் பங்காற்ற விரும்புகிறது. நாம் கடந்த காலத்தை பெருமையுடன் பார்க்கும் அதே சமயத்தில், ஆனால் எதிர்கலாம் இன்னும் சிறந்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் என திரு நரேந்திர மோடி கூறினார்.

அறிவியல்பூர்வமான கற்றலுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மையமாக இந்தியாவை மாற்றுவதாகவே நமது அனைத்து முயற்சிகளும் உள்ளன என பிரதமர் கூறினார். அதேநேரத்தில், நமது விஞ்ஞானிகள், தங்கள் அனுபவங்களை உலகின் மிகச் சிறந்த திறமையானவர்களுடன் பகிர்ந்து கொண்டு வளர வேண்டும். இதை அடைய நாம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்று, இந்திய விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பளிக்கும் ஹேக்கத்தான் போட்டி.

ஆரம்ப நிலையிலேயே அறிவியல் மனநிலையை வளர்க்க புதிய தேசிய கல்வி கொள்கை உதவும் என பிரதமர் உறுதிப்பட கூறினார். இப்போது கவனம் பாடப்புத்தகத்திலிருந்து ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுக்கு மாறியுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை, உயர்தர ஆசிரியர்கள் உருவாவதை ஊக்குவிக்கும். இந்த அணுகுமுறை, இளம் விஞ்ஞானிகளுக்கு உதவும். இதற்கு அடல் புதுமை திட்டம் மற்றும் அடல் டிங்கரிங் பரிசோதனை கூடங்கள் துணை புரிகின்றன என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்

தரமான ஆராய்ச்சியை, திறமையானவர்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்க பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் விஞ்ஞானிகளுக்கு இந்த திட்டம் உதவுகிறது என பிரதமர் கூறினார்.

தண்ணீர் பற்றாக்குறை, மாசு, மண் தரம், உணவு பாதுகாப்பு போன்ற பல சவால்கள் நமது நாட்டில் உள்ளன. இதற்கு நவீன அறிவியலில் தீர்வு உள்ளது என பிரதமர் கூறினார். நமது கடலில் நீர், எரிசக்தி, மற்றும் உணவு வளங்களை விரைவாக ஆய்வு செய்வதில் அறிவியலுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. இதற்காக இந்தியா ஆழ்கடல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது மற்றும் இதில் வெற்றியடைந்துள்ளது என அவர் கூறினார். அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளின் நன்மை, வர்த்தகம் மற்றும் வணிகத்திலும் ஒரு வழியைக் காட்டுகிறது என அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682740

                                                                 -----



(Release ID: 1682823) Visitor Counter : 189


Read this release in: English , Urdu , Hindi , Punjabi