மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களிடம் காணொலி மூலம் மத்திய கல்வி அமைச்சர் உரையாடினார்
Posted On:
22 DEC 2020 6:48PM by PIB Chennai
எதிர்வரும் போட்டித் தேர்வுகள் மற்றும் வாரிய தேர்வுகள் குறித்து நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களிடம் காணொலி மூலம் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' உரையாடினார்.
கடவுளைவிட ஆசிரியர்கள்
முக்கியமானவர்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், 'ஆச்சார்ய தேவோ பவ' என்பதை மனதில் கொண்டு ஆசிரியர்களை நாம் அனைவரும் மிகவும் மதிக்க வேண்டும் என்றார்.
ஆசிரியர்கள் எடுத்த முயற்சிகளின் காரணமாக இணையம் மூலமாக கல்வி கற்பிக்கும் திட்டம் நாடு முழுவதும் வெற்றியடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
கொரோனா குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியிலும் சமுதாயத்திலும் ஏற்படுத்தியதற்காக ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் நன்றி கூறினார்.
தேர்வு தேதிகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்களின் நலன் கருதியே இந்த அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். 2021 தேர்வுகளுக்காக தேவையான நடவடிக்கைகளை சிபிஎஸ்ஈ எடுத்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682738
-----
(Release ID: 1682819)