அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மரபியலின் முக்கியத்துவம் குறித்து விஞ்ஞான யாத்திரையின் போது விளக்கப்பட்டது

Posted On: 22 DEC 2020 6:28PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020- முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான யாத்திரையில், மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம்-மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியலுக்கான நிறுவனம் (சி எஸ் ஆர் - ஜி பி), புதுதில்லி கலந்து கொண்டது.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய சி எஸ் ஆர் - ஜி ஆர் இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால், அறிவியல் ஆர்வம், மனிதநேயம் மற்றும் சீர்திருத்தம் உள்ளிட்டவற்றில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது இந்திய அரசியல் சாசனத்தின் படி ஒவ்வொரு இந்தியருக்கும் அவசியம் என்றார்.

நல்ல அறிவியலின் மீது பல ஆண்டுகளாக செய்த முதலீட்டின் விளைவாக கொரோனா பெருந்தொற்றின் போது அறிவியல் உலகத்தால் வேகமாக செயலாற்ற முடிந்தது என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

மரபியலின் முக்கியத்துவம் குறித்து விஞ்ஞான யாத்திரையின் போது விளக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே விஜய்ராகவன், கொவிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில்  தொழில்துறை மற்றும் சமுதாயம் ஆகியவற்றோடு கைகோர்த்து அறிவியல் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682732



(Release ID: 1682818) Visitor Counter : 158


Read this release in: English , Urdu , Hindi , Punjabi