ஜல்சக்தி அமைச்சகம்
நீர் வளத்தை துல்லியமாக கண்டறிதல் உள்ளிட்டவற்றுக்காக நிலத்தடி நீர் வாரியம் மற்றும் சிஎஸ்ஐஆர்-என்ஜிஆர்ஐ இடையே ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
21 DEC 2020 6:47PM by PIB Chennai
நீர் வளத்தை துல்லியமாக கண்டறிதல், வடமேற்கு இந்தியாவில் வறண்ட பகுதிகளின் மேலாண்மை உள்ளிட்டவற்றுக்காக மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் ஹைதாரபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர்-என்ஜிஆர்ஐ ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இதன் மூலம், நீர் வளம் உள்ள பகுதிகளை கண்டறியும் திட்டத்தின் கீழ், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் முன்னேறிய வான்வழி புவி-இயற்பியல் ஆய்வு நடத்தப்படும்.
மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் ஆகியோரின் முன்னிலையில், நிலத்தடி நீர் வாரியத்தின் தலைவர் மற்றும் சிஎஸ்ஐஆர்-என்ஜிஆர்ஐ இயக்குநருக்கிடையே புது தில்லியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், ராஜஸ்தானில் 65,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும், குஜராத்தில் 32,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும், ஹரியானாவில் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் ஆய்வு நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682429
**********************
(रिलीज़ आईडी: 1682484)
आगंतुक पटल : 262