பாதுகாப்பு அமைச்சகம்

போர் கப்பல் தயாரிப்பு மற்றும் கொள்முதல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியாக வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 21 DEC 2020 6:49PM by PIB Chennai

இந்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி, போர்க்கப்பல் தயாரிப்பு மற்றும் கொள்முதல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியாக இன்று பொறுப்பேற்றார்.  தில்லி ஐஐடியில் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் முதுநிலை பட்டம் வென்ற இவர், புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்று , கடற்படையின் மின்னியல் பிரிவில் கடந்த கடந்த 1985ம் ஆண்டு சேர்ந்தார்.  கடற்படையில் கடந்த 35 ஆண்டு காலமாக  பணியாற்றும் இவர் ஐஎன்எஸ் விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட கடற்படையின் பல பிரிவுகளில் பல பதவிகளில் பணியாற்றியவர்.  கடற்படையின் மின்னியல் பயிற்சி மையமான ஐஎன்எஸ் வல்சுராவுக்கும் இவர் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682432

**********************


(रिलीज़ आईडी: 1682480) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी