புவி அறிவியல் அமைச்சகம்

பருவ மழை முடிவு - தென்மேற்கு பருவமழை 2020 அறிக்கை: இந்திய வானிலைத்துறை வெளியீடு

Posted On: 21 DEC 2020 3:43PM by PIB Chennai

நடப்பாண்டிற்கான தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்தது குறித்தும் பல பகுதிகளில் பெய்த மழை அளவு குறித்தும் பருவ மழை முடிவு- தென்மேற்கு பருவமழை 2020’ அறிக்கையை இந்திய வானிலைத் துறை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

நாடு முழுவதும் ஜூன்-செப்டம்பர் பருவமழை நீண்ட கால சராசரி அளவாக 109 சதவீதம் இருந்தது.

வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, தெற்கு தீபகற்ப பகுதி மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பருவ மழை பொழிவு முறையே 84, 115, 130 மற்றும் 106 சதவீதமாக இருந்தது.

நாடு முழுவதும் மழைப் பொழிவு கடந்த ஜூன் மாதத்தில் நீண்ட கால சராசரி அளவாக 118 சதவீதமாகவும், ஜூலையில் 90 சதவீதமாகவும், ஆகஸ்ட்டில் 127 சதவீதமாகவும், செப்டம்பரில் 104 சதவீதமாகவும்

* தென்மேற்கு பருவமழை அந்தமான்  கடல் பகுதி மற்றும் நிகோபார் தீவுகளை கடந்த மே 17ம் தேதி நெருங்கியது. கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும்  ஜூன் 26ம் தேதி பரவியது. நாடு முழுவதும் அக்டோபர் 28-ல் இது முடிவடைந்தது. இந்த கால கட்டத்தில் நிசர்கா புயல் ஜூன் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை உருவானது.

ஆகஸ்ட் மழைக்கான முன்னறிவிப்பு மற்றும் ஒட்டுமொத்த மழைக்காலத்தின் இரண்டாவது பாதியில் மழைப்பொழிவு, பெய்த மழை அளவைப் பொறுத்தவரை குறைத்து மதிப்பிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டதுஅதேசமயம் ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் மழைப்பொழிவுக்கான கணிப்புகள்மற்றும் வடமேற்கு இந்தியாவுக்கான முன்னறிவிப்பு மிகைப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682381

••••••

(Release ID: 1682381)



(Release ID: 1682407) Visitor Counter : 175


Read this release in: English , Urdu , Hindi