நிதி அமைச்சகம்

அரசுப் பங்குகளின் ஏல விற்பனைக்கான பற்றிய அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 DEC 2020 7:03PM by PIB Chennai

அரசுப் பங்குகளை ஏல நடவடிக்கையின் மூலம் விற்பது குறித்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி, '3.96 சதவீத அரசுப் பங்கு, 2022' ரூ 2,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும். இது தவிர மேலும் சில பங்குகளும் விற்கப்படும்.

'5.15 சதவீத அரசுப் பங்கு, 2025' ரூ 11,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

'5.85 சதவீத அரசுப் பங்கு, 2030' ரூ 9,000 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

'6.80 சதவீத அரசுப் பங்கு, 2060' ரூ 6,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் 2020 டிசம்பர் 24 (வியாழக்கிழமை) அன்று இந்த ஏலங்கள் நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681786

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1681826) வருகையாளர் எண்ணிக்கை : 192
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Punjabi , Manipuri , Urdu , English , Telugu