வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தக உறவை வலுப்படுத்துவதை இந்தியாவும்-இங்கிலாந்தும் எதிர்நோக்கியுள்ளன : சிஐஐ கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரை

Posted On: 17 DEC 2020 6:40PM by PIB Chennai

வர்த்தக உறவை வலுப்படுத்துவதை இந்தியாவும் - இங்கிலாந்தும் எதிர்நோக்கியுள்ளன என  சிஐஐ கூட்டத்தில்  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின் (பிரக்ஸிட்) - இந்தியாவுடனான வர்த்தக உறவு குறித்து இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் திருமிகு.டிரஸ்லிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் திரு பியூஷ் கோயல் பேசியதாவது:

அடுத்த ஜனவரியில் நடைபெறும் 71வது குடியரசு தின விழாவில், தலைமை விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வது இந்தியாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இரு நாடுகள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவில் திருப்பு முனையாக இருக்கும்.

பிரக்ஸிட்டுக்குப் பின், இரு நாடுகள் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதை முன்கூட்டியே முடிப்பதற்கான திட்டத்தை இங்கிலாந்து ஏற்கும் என நம்புகிறேன். விரைவில் கிடைக்கும் பலன், இரு தரப்புக்கும் நல்லது.

இரு நாடுகள் இடையே சமீபத்தில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரு நட்பு நாடுகளின் உறவும் மேலும் வலுவடைந்து விரிவடையவுள்ளது.

கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் உட்பட பல துறைகளி்ல இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விவாதத்தின் முடிவு இனிமையாகவும், இருதரப்புக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681501

**********************


(Release ID: 1681559) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi