தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

கிறிஸ்துமஸ்/புத்தாண்டு வாழ்த்துத் தபால்களை அனுப்ப தில்லி தபால் வட்டாரம் சிறப்பு ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 17 DEC 2020 5:47PM by PIB Chennai

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துத்  தபால்களை அனுப்ப, தில்லி தபால் வட்டாரம், 34 தபால் அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள 2 ஆர்எம்எஸ் தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தில்லி அசோக் விகார், சாணக்யா புரி, கரோல் பாக் உள்ளிட்ட 36 தபால் நிலையங்களில் இருந்து டிசம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ்/புத்தாண்டு வாழ்த்துத் தபால்களை பெற்று உடனுக்குடன் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681469

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1681518) வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu